/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகள் தின நல விழா
/
மாற்றுத்திறனாளிகள் தின நல விழா
ADDED : டிச 13, 2025 06:40 AM

கள்ளக்குறிச்சி: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி அம்மன் நகர், தனியார் திருமண மண்டபத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.
விழாவை கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கேக் வெட்டி வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்த தனியார் தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளி சங்கங்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு கேடயங்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மைய இயன்முறை மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர சேர்மன் சுப்ராயலு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ், முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

