/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உழவர் நலத்துறை திட்ட முகாம்
/
உழவர் நலத்துறை திட்ட முகாம்
ADDED : டிச 13, 2025 06:39 AM

தியாகதுருகம்: கூந்தலுார் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் உழவரைத்தேடி வேளாண்மை, உழவர் நலத்துறை திட்டம் நேற்று நடந்தது.
தியாகதுருகம் அடுத்த கூந்தலுார் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) ரகுராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் செல்விராமதாஸ், துணைத்தலைவர் மூக்காயி முனியன் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா வரவேற்றார்.
முகாமில், வேளாண்மைத்துறை சார்ந்த திட்டங்கள், பயிர் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம், விவசாய அடையாள எண் பதிவு செய்வதன் அவசியம், மின்னணு தேசிய வேளாண் சந்தை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
துணை வேளாண்மை அலுவலர் ராஜா, உதவி தோட்டக்கலை அலுவலர் ரஞ்சிதா, ஒழுங்குமுறை விற்பனை கூட இளநிலை உதவியாளர் தேவராஜா, பயிர் அறுவடை பரிசோதகர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

