/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மண்டல இணை பதிவாளர் ஆய்வு
/
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மண்டல இணை பதிவாளர் ஆய்வு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மண்டல இணை பதிவாளர் ஆய்வு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மண்டல இணை பதிவாளர் ஆய்வு
ADDED : டிச 13, 2025 06:36 AM

கள்ளக்குறிச்சி: பூட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பணியாளர்கள் வருகை விபரம், பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை விபரங்கள், இருப்புத்தொகை, பி.ஓ.எஸ்., இயந்திரத்தில் உள்ள இருப்பு விபரங்களும், கிடங்கில் உள்ள பொருட்களும் சரியான எண்ணிக்கையில் உள்ளதா, அலுவலகத்தின் மேல் தளம் ஆகியவற்றை ஆய்வு செய்து, சங்க வளாகத்தை துாய்மையாக பராமரிக்குமாறும், மரக்கன்றுகளை நடுமாறும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கடன் தொகை சரியான முறையில் வழங்கப்படுகிறதா, வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அப்போது, சங்க செயலாளர் மாயவன், உதவி செயலாளர் தனுஷ்கோடி மற்றும் சங்க பணியாளர்கள் உடனிருந்தனர்.