/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதியார் பிறந்தநாள் விழா
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதியார் பிறந்தநாள் விழா
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதியார் பிறந்தநாள் விழா
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதியார் பிறந்தநாள் விழா
ADDED : டிச 13, 2025 06:36 AM

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். கல்லுாரி டீன் அசோக், தமிழ்த்துறை தலைவி பிரவீனா வாழ்த்துரை வழங்கினர். மாணவி அபி வரவேற்றார்.
கல்லுாரி ஆளுநர் மதிவாணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, பன்மொழிப்புலமை, தொலைநோக்குப்பார்வை, தமிழன் பற்று, காசி போற்றும் பாரதி என்ற தலைப்புகளில் பேசினார். தொடர்ந்து, மாணவர்கள் பாரதியாரின் கவிதை, பாடல்களை பாடினர்.
மாணவிகள் மகாலட்சுமி, சத்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் பிந்து, பன்னீர்செல்வம், கோமதி, பார்த்திபன், பரசுராமன், நித்யா, சுபலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். மாணவன் ரகுபதி நன்றி கூறினார்.

