/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மெய்ப்பொருள் நாயனாருக்கு திருக்கோவிலுாரில் குருபூஜை விழா
/
மெய்ப்பொருள் நாயனாருக்கு திருக்கோவிலுாரில் குருபூஜை விழா
மெய்ப்பொருள் நாயனாருக்கு திருக்கோவிலுாரில் குருபூஜை விழா
மெய்ப்பொருள் நாயனாருக்கு திருக்கோவிலுாரில் குருபூஜை விழா
ADDED : டிச 13, 2025 06:33 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள மெய்ப்பொருள் நாயனாருக்கு குருபூஜை விழா நடந்தது.
நாயன்மார்கள் 63 பேரில், விபூதியையும், சிவனடியாரையும் சிவனாக கண்டு போற்றியவர் திருநீற்று செல்வர் என்று போற்றப்பட்டு, திருக்கோவிலுாரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவர் மெய்ப்பொருள் நாயனார்.
இவருக்கு கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் சித்தி வளாகம் அமைந்துள்ளது.
திருக்கோவிலுார் மெய்ப்பொருள் நாயனார் சித்தி வளாக வழிபாட்டு மன்றத்தின் சார்பில், 22ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. செத்தவரை தர்ம பரிபாலன டிரஸ்ட் சுவாமிகள் சிவஜோதி மோன சித்தர் இடப்பக் கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை, மாயம் துறவிய சங்க தலைவர் ஜீவா அம்மாள், எலந்தம்பட்டு அருணாச்சலம், விருத்தாசலம் 63 திருப்பணி மன்ற நிர்வாகி சங்கர், விழுப்புரம் சங்கர் முன்னிலை வகித்தனர்.
இட்டலிங்க ஆத்ம லிங்க மூர்த்திகளுக்கு, சிவனடியார்கள் அபிஷேக ஆராதனை, மலர் வழிபாடு, ஒலி வழிபாடுகளை செய்தனர். தொடர்ந்து மெய்ப்பொருள் நாயனார் மூலமூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
மாலை 3:00 மணிக்கு வி.புத்துார் பால கோபால பெருமாள் குழுவினரின் பஜனை, மணலுார்பேட்டை ராதா அம்மாள் குழுவினரின் திருவாசகர் முற்றோதலும், 6:00 மணிக்கு மெய்ப்பொருள் நாயனார் குறித்த சொற்பொழிவு, ஜீவ சீனிவாசனின் இசை சொற்பொழிவு நடந்தது. இதில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

