/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அம்மையகரம் கிராமத்தில் தி.மு.க., தேர்தல் பிரசாரம் துவக்கம்
/
அம்மையகரம் கிராமத்தில் தி.மு.க., தேர்தல் பிரசாரம் துவக்கம்
அம்மையகரம் கிராமத்தில் தி.மு.க., தேர்தல் பிரசாரம் துவக்கம்
அம்மையகரம் கிராமத்தில் தி.மு.க., தேர்தல் பிரசாரம் துவக்கம்
ADDED : டிச 12, 2025 07:21 AM

கள்ளக்குறிச்சி: அம்மையகரம் கிராமத்தில் தி.மு.க., சார்பில் 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' என்ற இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் மாயகண்ணன், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் மாதேஸ்வரி முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சிவஞானம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி சட்டபை தொகுதி தி.மு.க., தேர்தல் பார்வையாளர் தாமரைகண்ணன் பங்கேற்று என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி என்ற தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். கட்சி நிர்வாகிகளுக்கு பைக் மற்றும் மொபைல் ஸ்டிக்கர் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த நான்கரை ஆண்டுகளில் பொதுமக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக வழங்கி ஆதரவு திரட்டினர்.
நிகழ்ச்சியில், தி.மு.க., மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி, முருகேசன், சுதா மணிகண்டன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், கிளை செயலாளர்கள் தனபால், முருகேசன், ராமலிங்கம், பாலன், பிச்சைக்காரன், ஊராட்சி துணைத்தலைவர் முரளி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

