/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அருகே வேன் கவிழ்ந்து விபத்து
/
கள்ளக்குறிச்சி அருகே வேன் கவிழ்ந்து விபத்து
ADDED : டிச 12, 2025 07:22 AM
கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னை பழையபல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மனைவி பாலசுந்தரி,42; இவரும், இவரது குடும்பத்தினர் 12 பேரும் பொள்ளாச்சியில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டி.எண்.18 -ஏஜெ7602 என்ற பதிவெண் கொண்ட வேனில் சென்றுள்ளனர். சென்னை நங்கநல்லுாரை சேர்ந்த கங்காதுரை மகன் எழில்ராஜன்,29; என்பவர் வேனை ஓட்டியுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற போது திடீரென பின்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பாலசுந்தரிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மற்ற அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிரேன் மூலம் சாலையில் கவிழந்த வேனை மீட்டனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

