/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாரதா தேவி அம்பாள் ஜெயந்தி விழா
/
சாரதா தேவி அம்பாள் ஜெயந்தி விழா
ADDED : டிச 13, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் சாரதா தேவி அம்பாளின் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடந்தன.
உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் சாரதா தேவி அம்பாளின் 173 ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. அதனையொட்டி சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடந்தன. ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா தலைமையில் சிறப்பு யாகங்கள் நடந்தன.
அதைத் தொடர்ந்து தீபாராதனை வழிபாடு நடந்தது. முன்னதாக சாரதாம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ரத உற்சவம் நடந்தது. இதில் ஆசிரம சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

