/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிப்பர் லாரி மோதி மாற்றுத்திறனாளி பலி
/
டிப்பர் லாரி மோதி மாற்றுத்திறனாளி பலி
ADDED : பிப் 09, 2024 06:56 AM

ரிஷிவந்தியம்: பழையசிறுவங்கூரில் டிப்பர் லாரி மோதி மாற்றுத்திறனாளி இறந்தார்.
வாணாபுரம் அடுத்த மேட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் அருளேசன், 29; மாற்றுத் திறனாளி. இவர், தனக்கு மாற்றுத் திறனாளி சான்று வாங்குவதற்காக நேற்று காலை 9:00 மணியளவில் தனது தந்தை வீராசாமியுடன் டி.வி.எஸ்., மொபட்டில் மேட்டுச்சேரியில் இருந்து கள்ளக்குறிச்சி சென்றனர். மொபட்டை வீராசாமி ஓட்டினார்.
பழைய சிறுவங்கூர் நான்கு முனை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி வீராசாமி மொபட் மீது மோதியது.
இதில், மொபட்டின் பின்னால் அமர்ந்து சென்ற அருளேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். வீராசாமி காயமடைந்தார். பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

