ADDED : டிச 09, 2024 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: தென்கீரனுாரில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா நடந்தது.
வாய்மையே வெல்லும் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். சங்க தலைவர் ராஜிவ்காந்தி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு, கலை போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி தேவைப்படுவோர் முறையாக விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்பட்டது.