தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உளுந்துார்பேட்டையில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் ... தவியாய் தவிப்பு: பத்து நாட்களாகியும் தண்ணீர் வழங்காத அவலம்

உளுந்துார்பேட்டையில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் ... தவியாய் தவிப்பு: பத்து நாட்களாகியும் தண்ணீர் வழங்காத அவலம்

உளுந்துார்பேட்டையில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் ... தவியாய் தவிப்பு: பத்து நாட்களாகியும் தண்ணீர் வழங்காத அவலம்


UPDATED : செப் 24, 2026 05:58 AM

ADDED : செப் 23, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 05:58 AM ADDED : செப் 23, 2026 04:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: உளுந்தூர்பேட்டை நகராட்சி பகுதியில் 10 நாட்களாகியும் குடிநீர் விநியோகிக்கப்படாததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். உளுந்துார்பேட்டை நகராட்சி ஊ.கீரனுார், உளுநதுார் என வருவாய் பகுதிகளாகக் கொண்டு 24 வார்டுகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு உளுந்துார்பேட்டை பகுதியில் 108 ஏரி, குளங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இதனால் குடிநீர் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் பல குளங்கள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாக மாறிப்போனது.

நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு காரணமாக உளுந்துார்பேட்டை பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துபோனது. நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினசரி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலை மாறி, இரு நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் விநியோகிக்கும் கால இடைவெளி ஏற்பட்டது. பின்னர் நகராட்சி வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு பகுதி என பகுதி வாரியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதிலும் முறையாக மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க போதிய தண்ணீர் கிடைக்காததால் உளுந்துார்பேட்டை அடுத்த ஆரியநத்தம், கூ.கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து பைப்லைன் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக உளுந்தூர்பேட்டை நகராட்சி பகுதி மக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, மூன்று நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தினசரி குடிநீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன் பேரில் நகராட்சி நிர்வாகம் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பைப் லைனை அகற்றிவிட்டு புதிய பைப் லைன் அமைத்து தினசரி குடிநீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது.

இந்நிலையில் ஆரியநத்தம் பகுதியில் இருந்து உளுந்துார்பேட்டைக்கு குடிநீர் விநியோகிக்கும் பைப் லைனில் அவ்வபோது உடைப்பு ஏற்பட்டு வருவதால் உளுந்துார்பேட்டை நகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் தொடர்ந்தது.

இதனால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை 5 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் விநியோகிக்கும் காலம் இடைவெளி நீண்டது. தற்போது 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகிக்கப்படாததால் உளுந்துார்பேட்டை நகராட்சி பகுதி மக்கள் திணறி வருகின்றனர். நகராட்சியில் இருந்து குடிநீர் வராததால் மக்கள் பலர், குடிநீர் தொட்டிகள் இருக்கும் இடத்திற்கு சைக்கிள். பைக் என வாகனங்களில் குடங்களை எடுத்துச் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மக்களின் நிலைய உணர்ந்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் விநியோகிக்க மாற்று ஏற்பட்டை செய்ய போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us