/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
மாவட்ட வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 02, 2026 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட வங்கி ஊழியர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் முத்தையன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செல்லதுரை, மணிகண்டன் முன்னிலை வகித்தனர். வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் கல்யாணசுந்தரம் கண்டன உரையாற்றினார்.
வங்கிகளுக்கு வாரத்தின் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அனைத்து வங்கிகளிலிருந்து 9 தொழிற்சங்கத்தை சார்ந்த 100க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

