/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
மாவட்ட காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 22, 2025 11:34 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட காங். நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் தொகுதி அமைப்பாளர்கள், வட்டார தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். சட்டசபை தொகுதி அமைப்பாளர்கள் தேவராஜ், வீரமுத்து, திருப்பதிராஜ், துரைராஜ், சுகுமார், முருகன், இளவரசன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் லோக்சபா தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் கணிவண்ணன், சுகந்தன், முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், மாநில இணை செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று கிராம காங்., கமிட்டியை மறுசீரமைத்து கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
இதில் காங்., நிர்வாகிகள் சரண்ராஜ், கிருபானந்தம், தனபால், ராஜேந்திரன், அபுல் கலாம் ஆசாத், சிக்கந்தர், அப்பாராசு, ராதாகிருஷ்ணன், பிரபு, ஆறுமுகம், பவுனம்பால், ராஜேஸ்வரி, மதுரா தேவி, காஜா மொய்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

