/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட மருந்து வணிகர் சங்க செயற்குழு கூட்டம்
/
மாவட்ட மருந்து வணிகர் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : நவ 11, 2024 05:35 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி, இணைச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முத்துகருப்பன் வரவேற்றார். மாநில இணைச் செயலாளர் மதியழகன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், வரும் டிசம்பர் 15ம் தேதி சங்க பொதுக்குழு தேர்தல் கூட்டத்தை புதிய மாநில நிர்வாகிகள் அழைத்து நடத்துவது. அரசின் மருந்து கட்டுபாட்டுத்துறை சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அனைவரும் வணிகம் செய்வது, சங்கத்திற்கு சொந்த இடம் வாங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மொத்த மருந்து பிரிவு தலைவர் செல்வராஜ், மக்கள் தொடர்பு பிரிவு தலைவர் சேகர், வட்ட தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.