/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள்
/
மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள்
ADDED : ஜன 04, 2024 11:50 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
தமிழ்வளர்ச்சி துறையின் மூலம் 2024ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும்பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நடக்கிறது. கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 10ம் தேதி காலை 10 மணிக்கு உளுந்துார்பேட்டை ஜவகர்லால் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2வது பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தினை 97869 66833 என்ற எண் அல்லது இணையதளம் tamildevelopmentvpm@gmail.com, விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.