/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
/
மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
ADDED : செப் 28, 2025 03:52 AM

கள்ளக்குறிச்சி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கள்ளக்குறிச்சியில் அண்ணாத்துரை பிறந்த நாளையொட்டி நடந்த சைக்கிள் போட்டியை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவிலும் தனித்தனியாக சைக்கிள் போட்டி நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி கச்சிராப்பாளையம் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் நிறைவு அடைந்தது. இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, தலா ரூ. ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 4 முதல 10 இடம் வரை வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், தலா ரூ. 250 தொகை வழங்கப்பட்டது.