/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட அளவிலான கராத்தே போட்டி
/
மாவட்ட அளவிலான கராத்தே போட்டி
ADDED : ஜன 02, 2026 04:09 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டியில் சாம்பியன்ஸ் மேக்கர் அகாடமி மாணவர்கள் 24 பேர் பதக்கம் வென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது.
இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற சடையம்பட்டு, செல்லம்பட்டு கிராம சாம்பியன்ஸ் மேக்கர் அகாடமி மாணவ மாணவியர்கள் 13 தங்கப் பதக்கம், 9 பேர் வெள்ளி பதக்கம், 2 பேர் வெண்கல பதக்கம் பெற்றனர். தங்கப்பதக்கம் பெற்ற மாணவ மாணவிகள் இம்மாதம் 4 தேதி நடக்க உள்ள மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
வெற்றி பெற்று மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கராத்தே சங்க தலைவர் செங்குட்டுவன், செயலாளர் கோபு, சேர்மன் ஏழுமலை மற்றும் சாம்பியன்ஸ் மேக்கர் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.

