/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி
/
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி
ADDED : நவ 27, 2024 09:55 PM

கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிக்கு மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் போட்டி நடந்தது. 50, 100 மற்றும் 200 மீட்டர் தொலைவுகள் மற்றும் 4 வகையான 'ஸ்டைல்'களில் தனி, தனியாக போட்டி நடத்தப்பட்டது.
இதில், 350 மாணவர்கள், 200 மாணவிகள் என மொத்தமாக 550 பேர் பங்கேற்றனர். அனைத்து வகையான பிரிவுகளிலும் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ, மாணவிகள் அடுத்த கட்டமாக திருநெல்வேலியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
போட்டியின் போது, நீச்சல் பயிற்சியாளர் லதா, உடற்கல்வி இயக்குனர்கள் பாலாஜி, ஹரிஹரன், தணிகைவேல், செந்தமிழ்ச்செல்வன், பாலமுத்து, உடற்கல்வி ஆசிரியர்கள் தினகரன், தனச்செல்வன், வீரமுத்து, பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.