/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா
ADDED : டிச 06, 2025 05:50 AM
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார்.
விழுப்புரம் ஆர்.எஸ்., அறக்கட்டளை நிறுவனர் சிவசக்திவேல், கல்லுாரி டீன் அசோக் வாழ்த்துரை வழங்கினர்.
சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக் கழக என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அற்புதவேல்ராஜா சிறப்பு அழைப்பாள ராக பங்கேற்று பேசிய தாவது:
இளைஞர்கள் தங்களது தனி திறமைகளை மாநில மற்றும் தேசிய அளவில் வெளிப்படுத்த முக்கிய களமாக இளைஞர் திருவிழா உள்ளது. இதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பேசினார்.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் பேச்சு, கவிதை, ஓவியம், பாட்டு, கட்டுரை மற்றும் நடனப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்றவர்கள் அடுத்த கட்டமாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை உதவி பேராசிரியர் ஹேமலதா செய்திருந்தார். வணிக மேலாண்மை துறை தலைவர் டாக்டர் ராஜா நன்றி கூறினார்.

