/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட பேச்சு, கட்டுரை போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
/
மாவட்ட பேச்சு, கட்டுரை போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
மாவட்ட பேச்சு, கட்டுரை போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
மாவட்ட பேச்சு, கட்டுரை போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஏப் 25, 2025 05:31 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு :
அரசு, அரசு நிதியுதவி பெறும், தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியருக்கு வரும், மே 9ம் தேதி தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேச்சு, கட்டுரை போட்டி நடக்க உள்ளது.
அதேபோல கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வரும் மே, 10ம் தேதி பாவந்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போட்டி நடக்கிறது.
மாவட்ட அளவில் நடக்க உள்ள, போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், https://tamilvalarchithurai.tn.gov.in என்ற தமிழ் வளர்ச்சித்துறை இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் விழுப்புரத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சித்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று படிவத்தை பெறலாம்.
பூர்த்தி செய்த படிவத்துடன் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் பரிந்துரை கடிதத்துடனும், கல்லுாரி மாணவர்கள் முதல்வர் அல்லது துறைத்தலைவர் பரிந்துரை கடிதத்துடனும் வரும், மே 2ம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.
போட்டியின் போது தலைப்புகள் அறிவிக்கப்படும். முதல்பரிசு பெறுபவர்களுக்கு, ரூ.10 ஆயிரம்; இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம்; மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம்; என வழங்கப்படும்.
மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்கள் வரும், ஜூன் 3ம் தேதி நடக்கும் செம்மொழி விழா போட்டிக்கு தகுதிபெறுவர்.
மாநில அளவில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.15 ஆயிரம்; இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம்; மூன்றாம் பரிசாக ரூ.7 ஆயிரம்; மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.