/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
/
கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
ADDED : செப் 24, 2025 06:07 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கோ -ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவங்கியது.
கலெக்டர் பிரசாந்த் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்து கூறியதாவது;
கோ -ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், சேலம், திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உருவான பருத்தி சேலைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள் உள்ளிட்ட ஏற்றுமதி ரகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. மாதாந்திர சிறு சேமிப்பு திட்டத்தின்படி, மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.3,000 வரை 11 மாத தவணைகள் மட்டும் பெறப்பட்டு 12வது மாத தவணையை கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.
தீபாவளியை முன்னிட்டு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அனைத்து அரசு பணியாளர்களுக்கும் கடன் விற்பனை வசதியும் உண்டு. எனவே, அனைத்துத் துறை பணியாளர்களும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிட வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், கோ- ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் மாணிக்கம், துணை மண்டல மேலாளர் பிரேம்குமார், விற்பனை நிலைய பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.