/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 24, 2025 06:11 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி, பொருளாளர் சாமிதுரை, இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் செந்தில், பொருளாளர் வீராசாமி ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக நியமனம் செய்து ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்குதல், அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.