கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
UPDATED : நவ 19, 2026 05:00 PM
ADDED : நவ 19, 2026 05:00 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய த.வெ.க., எம்.எல்.ஏ., அருள்விக்னேைஷ கண்டித்து தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய, நகர செயலாளர்கள் நல்லதம்பி, அருணாசலம், இளையராஜா, ரவிச்சந்திரன், அருள், மஞ்சுநாதன், சுதாகர், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தன், குழந்தைவேல், அவைத் தலைவர் பெரியசாமி, பொருளாளர் கருணாகரன் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பச்சமுத்து உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
