/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாறி மாறி உண்மையை சொல்லும் தி.மு.க.,- அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி அரசியல் களத்தில் விநோதம்
/
மாறி மாறி உண்மையை சொல்லும் தி.மு.க.,- அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி அரசியல் களத்தில் விநோதம்
மாறி மாறி உண்மையை சொல்லும் தி.மு.க.,- அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி அரசியல் களத்தில் விநோதம்
மாறி மாறி உண்மையை சொல்லும் தி.மு.க.,- அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி அரசியல் களத்தில் விநோதம்
ADDED : நவ 25, 2025 05:04 AM
க ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., வும், அ.தி.மு.க., வும் மாறி மாறி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து கொள்ளும் காமெடி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் இருக்கும் அம்பேத்கர் சிலை வெண்கல சிலையாக வேறு இடத்தில் மாற்றி அமைக்க வி.சி.,யினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு தி.மு.க., வின் மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தனது சொந்த செலவில் வெண்கல சிலையை வாங்கிக் கொடுத்துள்ளார்.
அம்பேத்கர் சிலை அமைப்பதில் அனைத்து கட்சியினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என அ.தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால் சிலை வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை கண்டித்து கருணாபுரம் பகுதியில் வி.சி.,யினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற தி.மு.க., எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன், அ.தி.மு.க., வை பொருத்தவரை சிலை அமைப்பதில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்னர் என அ.தி.மு.க., வை தாக்கி பேசினார்.
மேலும், நீங்கள் என்ன கத்தினாலும், குரல் கொடுத்தாலும் அம்பேத்கர் சிலை நிறுவப்படுவது உறுதி என கூறினார்.
இதனால் வெகுண்டெழுந்த அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் எஸ்.ஐ.ஆர்., பணியில் அதிகாரம் செலுத்தி முறைகேடு செய்ய முயலும் தி.மு.க., வை, கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் பேசிய குமரகுரு, தி.மு.க., அம்பேத்கர் சிலை அமைப்பதில் அரசியல் செய்கிறது. அம்பேத்கர் தேசிய தலைவர், அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்துடன் சிலை அமைக்க நாங்கள் ஆதரவாக இருப்போம், பட்டியல் சமூக மக்களுக்கு அ.தி.மு.க., தான் பாதுகாப்பு என்ற தொணியில் தி.மு.க., வை கடுமையாக சாடி பேசினர்.
இந்த பிரச்னை அரசியலாக்கப்பட்ட சூழலில், தி.மு.க., வினரும், அ.தி.மு.க., வினரும் சமூக வலைதளங்களில் மாறி மாறி தரம் தாழ்ந்து கடந்த ஒரு வாரமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக தி.மு.க., மாவட்ட செயலாளர் பற்றி அ.தி.மு.க., வினரும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பற்றி தி.மு.க., வினரும் அரசியல் வாழ்க்கைக்கு முந்தைய கடந்த கால செயல்பாடுகள் குறித்தும், சமீப கால சொத்து குவிப்பு குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை 2 கட்சிகளின் ஐ.டி., விங்குகளும் களமாடி வருகிறது.
வரும் சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு இருவரையும் மையப்படுத்திதான் கள்ளக்குறிச்சி அரசியல் இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதற்காகவும், மக்கள் மனதில் பதிய வைக்கவும் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகத்தின் வெளிப்பாடாகவே இருப்பதாக நடுநிலையாளர்கள் சமூக வலைதள பதிவுகள் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
எப்படியிருந்தாலும் மாவட்டத்தில் நாங்கள் இருவர் மட்டுமே ஜாம்பவான்கள், எங்களைத் மீறி அரசியல் களத்தில் யாரும் ஜொலித்து விட முடியாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், 'ஐயோ பாவம், பய புள்ளைங்க மாறி மாறி உண்மைய சொல்றாங்களே... இவங்க எல்லாம் கடவுளுக்கு சமம்' என வடிவேல் காமெடிதான் ஞாபகத்திற்கு வருகிறது என கலாய்க்கின்றனர் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள்.

