/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டை தொகுதிக்கு தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்; எம்.எல்.ஏ.,வுக்கு பொறுப்பு அமைச்சர் 'செக்'
/
உளுந்துார்பேட்டை தொகுதிக்கு தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்; எம்.எல்.ஏ.,வுக்கு பொறுப்பு அமைச்சர் 'செக்'
உளுந்துார்பேட்டை தொகுதிக்கு தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்; எம்.எல்.ஏ.,வுக்கு பொறுப்பு அமைச்சர் 'செக்'
உளுந்துார்பேட்டை தொகுதிக்கு தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்; எம்.எல்.ஏ.,வுக்கு பொறுப்பு அமைச்சர் 'செக்'
ADDED : ஜூலை 15, 2025 07:28 AM
உளுந்துார்பேட்டையில் சிட்டிங் எம்.எல்.ஏ., மணிகண்ணன் தொகுதியில் வசந்தம் கார்த்திகேயனை, அமைச்சர் வேலு களமிறக்கியிருப்பது கள்ளக்குறிச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., மணிகண்ணன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலுவுடன் இணக்கமாக செல்லாமல் முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் வேலு, சாதுர்யமாக நிர்வாகிகளை வளைத்து போட்டு மணிகண்ணன் முறையாக செயல்படவில்லை என அவர் மீது தலைமைக்கு, புகார் அளித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கிளைச் செயலாளர் உள்ளிட்ட அடிமட்ட கட்சியினருக்கு கமிஷன் வழங்காமல் அனைத்து டெண்டர் பணிகளையும் மணிக்கண்ணன் வழங்கி வருவதால், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட மேல்மட்ட நிர்வாகிகள் பலனடைய முடியாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை அப்படியே அறுவடை செய்ய நினைத்த அமைச்சர் வேலு, வசந்தம் கார்த்திகேயனை கடந்த மாதம் உளுந்துார்பேட்டை தொகுதி பொறுப்பாளராக தனிப்பட்ட முறையில் நியமித்து, கட்சி அலுவலகத்தைத் திறந்து, வசந்தம் கார்த்திகேயன் தான் தொகுதி பொறுப்பாளர் என வெளிப்படையாகவே அறித்தார்.
இதனால் உற்சாகமடைந்த வசந்தம் கார்த்திகேயன் உளுந்துார்பேட்டை நிர்வாகிகளை குஷிப்படுத்த தொடங்கி விட்டார்.
இதில் மற்றொரு கணக்கும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெற்றால் ரிஷிவந்தியம் தொகுதியை அவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும். எனவே இப்போதே உளுந்துார்பேட்டைக்கு துண்டு போட்டு வைத்த மாதிரியும் இருக்கும்.
தேர்தல் பணியை மாவட்டத்தில் சிறப்பாக செய்த பெருமையும் கிடைக்கும் என்ற தோரணையில் வசந்தத்தின் வாசம் உளுந்துார்பேட்டையிலும் வீசத் தொடங்கியுள்ளது. இது மணிகண்ணன் ஆதரவாளர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.