/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் தி.மு.க., ரத்த தான முகாம்
/
திருக்கோவிலுாரில் தி.மு.க., ரத்த தான முகாம்
ADDED : டிச 03, 2025 06:23 AM

திருக்கோவிலுார்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், திருக்கோவிலுாரில் ரத்ததான முகாம் நடந்தது.
உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருக்கோவிலுார் தொகுதி, தி.மு.க., இளைஞரணி சார்பில், வாசவி திருமண மண்டபத்தில் ரத்த தான முகாம் நடந்தது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையுடன் இணைந்து நடந்த முகாமை, மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பு வரவேற்றார். நகராட்சி சேர்மன் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் கற்பகம், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், பிரபு, சடகோபன், தீனதயாளன், விஸ்வநாதன், லுாயிஸ் முன்னிலை வகித்தனர். முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர்.
நகர செயலாளர் கோபி கிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர அவைத் தலைவர் குணா, நகர மன்ற உறுப்பினர் கோல்டு ரவி, நகர இளைஞரணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலுார் மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜவிநாயகம் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்ததானம் பெற்றனர். டாக்டர் அன்சாரிராஜா உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.

