/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி கூட்டம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி கூட்டம்
ADDED : ஜூன் 30, 2025 03:20 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதியில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில், 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி கூட்டம், திருக்கோவிலுார் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
மாவட்டச் செயலாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். பொன்முடி எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
புதிய உறுப்பினர் சேர்க்கை வழிமுறைகள் குறித்து நிகழ்ச்சியில் விளக்கி கூறப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், கற்பகம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தங்கம், தொகுதி பார்வையாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், பிரபு, விசுவநாதன், லூயிஸ், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், அரகண்டநல்லுார் பேரூராட்சி செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.