/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தே.மு.தி.க., சுவர் விளம்பரம் அழிப்பு: வி.சி.,யினருடன் வாக்குவாதம்
தே.மு.தி.க., சுவர் விளம்பரம் அழிப்பு: வி.சி.,யினருடன் வாக்குவாதம்
தே.மு.தி.க., சுவர் விளம்பரம் அழிப்பு: வி.சி.,யினருடன் வாக்குவாதம்
UPDATED : ஜூலை 26, 2026 10:35 PM
ADDED : ஜூலை 26, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே தே.மு.தி.க., சுவர் விளம்பரத்தை அழித்த வி.சி.,வினரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி சுவற்றில் தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் காமராஜ் தரப்பினர், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா பிறந்தநாள் சுவர் விளம்பரம் எழுதி இருந்தனர்.
இதற்கு அதே ஊரைச் சேர்ந்த வி.சி., கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அரசு சுவற்றில் விளம்பரம் எழுதக்கூடாது என கூறி விளம்பரத்தை அழித்தனர்.
இதனால் இரு கட்சியினரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த திருக்கோவிலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இருதரப்பனாரையும் சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர்.
