/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதையில் மினி பஸ் ஓட்டிய டிரைவர் கைது
/
போதையில் மினி பஸ் ஓட்டிய டிரைவர் கைது
ADDED : செப் 25, 2024 10:13 PM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுகோவிலில் இருந்து வேளாகுளம் வழியாக நேற்று முன்தினம் மாலை திருக்கோவிலுார் ஐந்து முனை சந்திப்பு வழியாக மினி பஸ் வந்தது. பஸ்சை டிரைவர் தாறுமாறாக ஓட்டி வந்தார். இதனை பார்த்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சத்தியன் மற்றும் போலீசார் மினி பஸ்சை நிறுத்தி டிரைவரை சோதனையிட்டனர். அவர், குடிபோதையில் பஸ்சை ஓட்டிய தெரியவந்தது.
இதுகுறித்து திருக்கோவிலுார் போக்குவரத்து போலீசார் பஸ்சை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், மதுராம்பட்டை சேர்ந்த, சக்கரையன், 33; மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மாற்று டிரைவர் மூலம் பஸ் இயக்கப்பட்டது.