ADDED : மே 21, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதிய விபத்தில் ஜே.சி.பி., டிரைவர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பெரிய தம்பி மகன் சதீஷ்குமார்,40; ஜே.சி.பி., டிரைவர்.
இவர் கடந்த, 20 ம் தேதி இரவு 9:30 மணிக்கு தனது பைக்கில், எலவனாசூர் கோட்டையில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரம் எச்சரிக்கை விளக்கு எரியாமல் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.