/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வர் வருகை ட்ரோன்கள் பறக்க தடை
/
முதல்வர் வருகை ட்ரோன்கள் பறக்க தடை
ADDED : டிச 25, 2025 06:38 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முதல்வர் வருகையொட்டி இரு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 26 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்து வீரசோழபுரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பிற்பகல் கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு செல்ல உள்ளதால் உளுந்துார்பேட்டை சுங்கச்சாவடி, பயணிக்கும் வழிகள், விழா நடைபெறும் இடங்களான உளுந்துார்பேட்டை, வீரசோழபுரம், ஏமப்பேர், அரசு நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் மாவட்ட எல்லைக்குள் இன்று 25ம் தேதி மற்றும் நாளை 26 ம் தேதி ஆகிய இரு நாட்கள் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களாக தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

