/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 01, 2024 04:28 AM

கள்ளக்குறிச்சி : ஏமப்பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலால் துறை அலுவலர்கள் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கலால் உதவி ஆணையர் குப்புசாமி தலைமை தாங்கினார். மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., அறிவழகன், நகராட்சி கமிஷனர் சரவணன், கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் விஷ்ணுமூர்த்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், போதைப் பொருட்கள் குறித்தும், அதை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் நோய்கள், பிரச்னைகள், மருத்துவ சிகிச்சை, குடும்ப உறுப்பினர்கள் பாதிப்பு ஆகியவை குறித்தும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, போதைப் பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்றனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சையத் காதர், கள உதவியாளர் மகேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் பாலுசாமி மற்றும் ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.