/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 05, 2025 07:48 AM

கள்ளக்குறிச்சி; ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கஞ்சா சாக்லேட் விற்பனை குறித்தும், என்.சி.சி., மாணவர்கள் சார்பில் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியும் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வட்டார கலால் அலுவலர் சிவசங்கர் தலைமை தாங்கினார். கல்லுாரி டீன் அசோக் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட யோகா சங்கத் தலைவர் சங்கீதவள்ளி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
போதைப்பொருள் பயன்படுத்தினால் பல்வேறு விதமான புற்றுநோய்கள் ஏற்பட்டு, குடும்பத்தையே அழித்து விடும், கஞ்சா தற்போது சாக்லேட் வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கி சாப்பிட கூடாது, போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், வணிக மேலாண்மை துறைத்தலைவர் ராஜா, இயற்பியல் துறை உதவி பேராசிரியர் அன்பரசு மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.