/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாலிபரை வெட்டிய போதை ஆசாமியால் பரபரப்பு
/
வாலிபரை வெட்டிய போதை ஆசாமியால் பரபரப்பு
ADDED : ஏப் 12, 2025 04:30 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரை, போதை ஆசாமி வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துாரைச் சேர்ந்த சக்திவேல் மகன் அரவிந்தன்.26; இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நண்பர்களுடன் தனது பிறந்தநாளை அப்பகுதி சாலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்போது மது போதையில் அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் வெங்கடேசன்,38; அங்கு வந்து, அரவிந்தன் மற்றும் அவரது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து வெங்கடேசன் தான் மறைத்து வைத்திருந்த 'கொடுவா' கத்தியால் அரவிந்தனின் தலையில் வெட்டினார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், வெங்டேசனிடம் இருந்து கத்தியை பிடுங்கி, அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த அரவிந்தனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 'தர்ம அடி'யில் காயமடைந்த வெங்கடேசனையும், சிகிச்சைக்கு மருத்துவனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.