/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 09, 2024 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : எஸ்.வி., பாளையம் அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் முல்லைமணி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் இளையராஜா வரவேற்றார்.
திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் சுமதி, போக்சோ சட்டம் குறித்தும், போதை பொருள் பயன்பாட்டின் தீமைகள், வன்கொடுமை சட்டம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் சின்னதுரை நன்றி கூறினார்.