
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலத்தை சேர்ந்தவர் ராமநாதன் மனைவி ஆண்டாள் 79; வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடலை மருத்துவக்கல்லுாரியின் ஆய்வுப்பணிகளுக்காக தானமாக வழங்க, இவரது மகன் மனோகரன் முடிவு செய்தார்.
சின்னசேலம் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் செல்வராஜ், முன்னாள் செயலாளர் உதயசூரியன், முன்னாள் பொருளாளர் ராமலிங்கம் ஆகியோரது உதவியுடன், அவரது உடல் சிதம்பரம் அண்ணாமலை முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க நிர்வாகி ராமச்சந்திரன் செய்திருந்தார்.