/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இருமல் டானிக் குடித்த முதியவர் பலி
/
இருமல் டானிக் குடித்த முதியவர் பலி
ADDED : ஜன 10, 2025 11:33 PM
சின்னசேலம்: சின்னசேலத்தில் இருமல் டானிக் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
சேலம் மாவட்டம், அழகாபுரம், எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் முத்துவேல் 67, சின்னசேலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது சேலம் பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது தாயார் வள்ளியம்மாள் சின்னசேலம், கடைவீதி பகுதியில் தனியாக வசித்து.
கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்க்க கடந்த 6ம் தேதி முத்துவேல் தனது தாயாரை பார்ப்பதற்காக சின்னசேலம் வந்துள்ளார்.
அவரது தாயாரின் நிலையைக் கண்டு மனம்முடைந்த முத்துவேல் வீட்டிலிருந்த இருமல் டானிக்கை குடித்து மயங்கியுள்ளார்.
அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துவேல் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.