/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வயிற்றில் கத்தியால் குத்திக் கொண்டு துாக்கில் தொங்கிய முதியவர் பலி
/
வயிற்றில் கத்தியால் குத்திக் கொண்டு துாக்கில் தொங்கிய முதியவர் பலி
வயிற்றில் கத்தியால் குத்திக் கொண்டு துாக்கில் தொங்கிய முதியவர் பலி
வயிற்றில் கத்தியால் குத்திக் கொண்டு துாக்கில் தொங்கிய முதியவர் பலி
ADDED : அக் 15, 2025 01:04 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தன்னை தானே வயிற்றில் கத்தியால் குத்திக் கொண்டு, துாக்கு போட்டு கொண்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் சேர்ந்தவர் முருகேசன், 69; குடிப்பழக்கம் உடையவர். இவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி முனியம்மாளிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 10ம் தேதி மாலை 5:00 மணிக்கு மதுபோதையில் வந்த முருகேசன், மனைவியுடன் தகராறு செய்தார்.
வீட்டிற்குள் சென்று காய்கறி அறுக்கும் கத்தியால் தன்னை தானே வயிற்றில் குத்திக் கொண்டார். பின்னர், வீட்டில் இருந்த கயிற்றால் துாக்கில் தொங்கினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று ரத்த காயங்களுடன் சுயநினையின்றி இருந்த முருகேசனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு முருகேசன் இறந்தார். இது குறித்து அவரது மகன் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.