/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பேருந்து நிலையத்தில் முதியவர் சடலம்
/
பேருந்து நிலையத்தில் முதியவர் சடலம்
ADDED : மே 05, 2025 05:50 AM
சங்கராபுரம்; சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று காலை, 75 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக வி.ஏ.ஓ., குமார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சங்கராபுரம் போலீசார் இறந்து கிடந்த முதியவர் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவர் சங்கராபுரம் அடுத்துள்ள அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் சின்னதம்பி, 75; என தெரிய வந்தது.
அவருக்கு திருமணமாகாத நிலையில், பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.