sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதியவர் கொலை வழக்கு; 3 பேரை பிடிக்க தனிப்படை

/

முதியவர் கொலை வழக்கு; 3 பேரை பிடிக்க தனிப்படை

முதியவர் கொலை வழக்கு; 3 பேரை பிடிக்க தனிப்படை

முதியவர் கொலை வழக்கு; 3 பேரை பிடிக்க தனிப்படை


ADDED : பிப் 18, 2025 05:58 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை; முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 3 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

உளுந்துார்பேட்டை தாலுகா கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா மனைவி சத்யா. இவரிடம் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த அருள்,45; என்பவர் பெட்ரோல் வாங்க ஸ்கூட்டி கேட்டார்.

இதற்கு சத்யா மறுக்கவே அருள் தகராறு செய்து சென்றார். இதுகுறித்து சத்யா தனது உறவினர்கள் சிலம்பரசன்,40; கவியரசன்,35; செந்தில்,40; ஆகியோரிடம் கூறினார். ஆத்திரமடைந்த 3 பேரும், அருளை தேடி தாய் மாமன் ஏழுமலை வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர்.

இதனை சமாதானம் செய்த ஏழுமலை தாய்மாமன் நாராயணசாமி, 70; என்பவரை குத்தி கொலை செய்தனர். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் வீரமணி, இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us