/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
/
சங்கராபுரத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 21, 2024 12:17 AM

சங்கராபுரம் : சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
பி.டி.ஓ., செல்லதுரை தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி முன்னிலை வகித்தார்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தோணியம்மாள் வரவேற்றார். சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 44 ஊராட்சிகளில் மொத்தம் 141 ஓட்டு சாவடிகள் உள்ளது.
இந்த ஓட்டு சாவடி மையங்களில் போதிய இடவசதி, மின்சார வசதி, கழிவறை, குடிநீர் வசதி மற்றும் சாய்தள வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், சவுந்தர்ராஜன்,ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

