/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின் தகன மேடை மேம்படுத்தும் பணி
/
மின் தகன மேடை மேம்படுத்தும் பணி
ADDED : ஜூலை 08, 2025 01:07 AM

திருக்கோவிலுார்:  திருக்கோவிலுார் நவீன மின் தகன மேடை ரோட்டரி சங்கம் சார்பில் மேம்படுத்தும் கட்டுமான பணி துவக்கியது.
திருக்கோவிலுார் நகராட்சி சார்பில் நவீன மின் தகன மேடை கட்டி திறக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்துடன், திருக்கோவிலுார் ரோட்டரி சங்கம் இணைந்து மேம்படுத்தி நிர்வகிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரோட்டரி சங்கம் சார்பில் அலுவலகம், சுற்று சுவர், பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
நகராட்சி சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளர் கோதம்சந்த், சாசன தலைவர் வாசன், தி.மு.க., நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், நகர அவைத் தலைவர் குணா, நகர மன்ற உறுப்பினர்கள் கோவிந்தன், கந்தன்பாபு, உஷா வெங்கடேசன், ரோட்டரி சங்க உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

