/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சீரமைப்பு பணியின் போது ஆற்றில் மூழ்கிய மின் ஊழியர்
/
சீரமைப்பு பணியின் போது ஆற்றில் மூழ்கிய மின் ஊழியர்
சீரமைப்பு பணியின் போது ஆற்றில் மூழ்கிய மின் ஊழியர்
சீரமைப்பு பணியின் போது ஆற்றில் மூழ்கிய மின் ஊழியர்
ADDED : டிச 13, 2024 02:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு:கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டில், டிச., 1ம் தேதி தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோரம் மின்கம்பங்கள் சேதமானது. நேற்று தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மின்கம்பி அமைக்கும் பணி நடந்தது.
பணியின் போது, மின்வாரிய ஒப்பந்த பணியாளர் மூங்கில்துறைப்பட்டு, காமராஜ் நகரைச் சேர்ந்த திலீப்குமார், 45, ஆற்றில் தவறி விழுந்ததில், அடித்துச் செல்லப்பட்டார். தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் தேடியும் திலீப்குமார் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடி வருகின்றனர்.