/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் திறப்பு
/
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் திறப்பு
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் திறப்பு
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் திறப்பு
ADDED : அக் 06, 2025 11:40 PM

சங்கராபுரம்; சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.5.73 கோடியில் கட்டப்பட்ட அவசர சிகிச்சை மைய புதிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது.
சங்கராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கை வசதி கொண்ட அவசர சிகிச்சை மையம் ரூ. 5.73 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.
கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று திறப்பு விழா நடந்தது. சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின், கானொலி காட்சி மூலம் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, கலெக்டர் பிரசாந்த் அவசர சிகிச்சை மைய புதிய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், உதயசூரியன் எம்.எல்.ஏ., மலையரசன் எம்.பி., ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், பேரூராட்சி சேர்மன் ரோஜா ரமணி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மாலினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., முருகன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், பேரூராட்சி துணை தலைவர் ராசாத்தி, வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி, ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜய்குமார், ஒன்றிய செயலாளர் கதிரவன், நகர செயலாளர் துரை, கமருதீன், சாகுல், பாலமுருகன், தயாளன், பழனி, தாசில்தார் வைரக்கண்ணன் உட்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர். டாக்டர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.