/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தெரு நாய்கள் மீது ஏர்கன் துப்பாக்கி சூடு; தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது

ADDED : அக் 06, 2025 11:39 PM
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே தெரு நாய்களை ஏர்கன் துப்பாக்கியதால் சுட்டது குறித்து தட்டிக் கேட்ட மூதாட்டியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த விரியூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரய்யன் மனைவி கலியம்மாள், 64; இவர் நேற்று முன்தினம் காலை வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது சண்டை கோழி வளர்க்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வீரசாமி, 50; இவரது மகன் நாராயணசாமி, 20; மற்றும் அந்தோணிராஜ் மகன் அரோக்கியசாமி, 22; அருணாசலம் மகன் விஜயன், 32; ஆகியோர் ஏர்கன் துப்பாக்கியால் தெரு நாய்களை சுட்டனர்.
இதனை தட்டிக்கேட்ட கலியம்மாளை, வீரசாமி உட்பட 4 பேரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து கலியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, வீரசாமி, நாராயணசாமி, அரோக்கியசாமி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயனை தேடி வருகின்றனர்.