/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.டி.ஓ., அலுவலகம் கட்டுமானப் பணி : கலெக்டர் ஆய்வு
/
ஆர்.டி.ஓ., அலுவலகம் கட்டுமானப் பணி : கலெக்டர் ஆய்வு
ஆர்.டி.ஓ., அலுவலகம் கட்டுமானப் பணி : கலெக்டர் ஆய்வு
ஆர்.டி.ஓ., அலுவலகம் கட்டுமானப் பணி : கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 06, 2025 11:39 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையில் கட்டப்பட்டு வரும் ஆர்.டி.ஓ., அலுவலக கட்டுமான பணியை கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தின் பின்புறத்தில் 3.75 கோடி மதிப்பில், 8,474 சதுர அடி பரப்பளவில் புதிய அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதனை கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார். பணியை தரமாகவும், உரிய கால அளவிற்குள் விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.