/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாட்கோ திட்டங்களை பயன்படுத்தி மேம்பட வேண்டும்; கலெக்டர் அறிவுறுத்தல்
/
தாட்கோ திட்டங்களை பயன்படுத்தி மேம்பட வேண்டும்; கலெக்டர் அறிவுறுத்தல்
தாட்கோ திட்டங்களை பயன்படுத்தி மேம்பட வேண்டும்; கலெக்டர் அறிவுறுத்தல்
தாட்கோ திட்டங்களை பயன்படுத்தி மேம்பட வேண்டும்; கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : அக் 06, 2025 11:38 PM
கள்ளக்குறிச்சி; தாட்கோ நலத்திட்டங்களை மக்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் எண்ணற்ற கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாட்கோ மூலம் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினரின் நலனுக்காக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை, சுயதொழில் செய்வதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, கல்விக்கடன், துாய்மைப் பணியாளர்கள் நல வாரியம், துரித மின்இணைப்பு, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கடன், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதியுதவி திட்டத்தின்கீழ் 23 குழுக்களுக்கு ரூ.1.64 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.7.46 கோடி, இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 2.35 கோடி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூக பொருளாதார தொழில் முனைவுத் திட்டத்தின்கீழ் ரூ. 8.34 கோடி, நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின்கீழ் ரூ.1.28 கோடி, துரித மின் இணைப்புத் திட்டத்தின்கீழ் ரூ.1.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே தாட்கோ சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களையும் பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.