/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்தல் நன்னடத்தை அமல்: கட்சி பேனர்கள் அகற்றம்
/
தேர்தல் நன்னடத்தை அமல்: கட்சி பேனர்கள் அகற்றம்
ADDED : மார் 18, 2024 06:13 AM

ரிஷிவந்தியம், :  ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., அலுவலகத்தை மூடி, வருவாய்த்துறை அலுவலர்கள் 'சீல்' வைத்தனர்.
ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., அலுவலகம் பகண்டைகூட்ரோட்டில் உள்ளது. லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், ரிஷிவந்தியம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குப்புசாமி முன்னிலையில் எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் அன்பழகன், வி.ஏ.ஓ., ஆனந்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும், வாணாபுரம் தாலுகாவுக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது. அரசு அலுவலகங்களில் வரையப்பட்டு கட்சி சார்ந்த சின்னங்கள், பெயர் ஆகியவை சுண்ணாம்பு பூசி அழிக்கப்பட்டு வருகிறது.
சங்கராபுரம்
சங்கராபுரம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள் துணியால் கட்டி மூடி மறைக்கப்பட்டது. மேலும், சங்கராபுரம், தேவபாண்டலம், எஸ்.குளத்துார், அரசம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் அரசியல் கட்சி பேனர்கள், கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. மேலும், சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
உளுந்துார்பேட்டை
உளுந்துார்பேட்டையில் எம்.எல்.ஏ., அலுவலக வளாகம் முன் பகுதி கதவு பூட்டப்பட்டு சீல் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் இ சேவை மையம் செயல்பட்டு வருவதால், எம்.எல்.ஏ.,வின் அலுவலக அறை மட்டும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு தாசில்தார் பிரபாகரன் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று காலை பூட்டி சீல் வைத்தனர். வருவாய் ஆய்வாளர் இளையராஜா, வி.ஏ.ஓ., முத்துராஜ் உடனிருந்தனர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஒன்றிய சேர்மன் மற்றும் துணை சேர்மன் அலுவலகங்களையும் பூட்டி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

