/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ADDED : ஜன 26, 2025 05:53 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளயில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி் நடத்தப்பட்டது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் மத்திய அரசின் சூழல் வனம், காலநிலை மாற்றத்துறை இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்ட தேசிய பசுமை படையினர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதனை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி வரவேற்றார்.
பள்ளி மாணவர்கள் 750க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கரகம், ஒயிலாட்டம், பாடல்கள், நாடகம் உள்ளிட்ட கிராமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பிளாஸ்டிக் தவிர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.