/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜி.அரியூரில் சமத்துவ பொங்கல் விழா
/
ஜி.அரியூரில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 16, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூர் ஊராட்சியில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஐ.ஜே.கே., சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு, பார்கவக்குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பொன்முடி முன்னிலை வகித்தார்.
பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, காலண்டர் கொடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஏழுமலை, கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில், விழுப்புரம் மத்திய மாவட்ட இலக்கிய அணி தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கிளை தலைவர் ராஜகோபால், கிளை செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினர்.